லாரி மோதி சிறுவன் பலி

ராஜபாளையத்தில் லாரி மோதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2021-08-12 19:22 GMT
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் ராமர் (வயது 44). இவர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அஸ்வின் (10). இந்தநிலையில் நேற்று இவர், அஸ்வினுடன் ராஜபாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் பொருட்கள் வாங்க சென்றுகொண்டிருந்தார். அப்போது பஞ்சு மார்க்கெட் அருகே சென்ற போது  பின்னால் வந்த லாரி எதிர்பாராவிதமாக இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அஸ்வின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ராமரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் முருகேசனை (58) கைது செய்தனர்.  

மேலும் செய்திகள்