பணம் பறித்த வாலிபர் கைது
சிவகாசியில் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
திருத்தங்கல் அண்ணாகாலனியை சேர்ந்தவர் கணேசன் மகன் மணிகண்டன் (வயது 32). இவர் சிவகாசி மணி நகரில் கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இவர் முத்துராமலிங்கபுரம் காலனியின் அருகில் உள்ள கடம்பன்குளம் கண்மாய் அருகில் இரு சக்கர வாக னத்தில் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த பனையடிப்பட்டியை சேர்ந்த சிவா என்கிற சிட்டிசன் (20) என்பவர் மணிகண்டனிடம் கத்தியை காட்டி மிரட்டி ஒரு செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மணிகண்டன் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்தனர்.