மழைக் காலங்களில் மீட்பு பணி குறித்து தீயணைப்புத் துறையினர் செயல்விளக்கம்

மீட்பு பணி குறித்து தீயணைப்புத் துறையினர் செயல்விளக்கம்

Update: 2021-08-12 17:23 GMT
வாணியம்பாடி

மழைக்காலங்களில் மீட்புபணியில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து தீயணைப்புத் துறை சார்பில் வாணியம்பாடி அடுத்த பள்ளிப்பட்டு ஏரியில் செயல் விளக்கம் நேற்று நடந்தது. வாணியம்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மழைக்காலங்களில் ஏரி, குளம், குட்டைகளில் தவறி விழுந்தவர்களை எப்படி மீட்பது என்றும், தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பது குறித்தும் பொதுமக்களுக்கு செயல்முறை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் தாசில்தார் மற்றும் வருவாய்துறையினர், கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்