விபத்தில் மர வியாபாரி பலி

விபத்தில் மர வியாபாரி பரிதாபமாக பலியானார்.

Update: 2021-08-12 17:09 GMT
காரைக்குடி,ஆக.
காரைக்குடி காந்தி திடல் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 42). மர வியாபாரம் செய்து வந்தார். இவர் தனது நண்பர் மூர்த்தி (32) என்பவருடன் உ.சிறுவயலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை மூர்த்தி ஓட்ட கார்த்திகேயன் பின்னால் அமர்ந்து சென்றார். மோட்டார்சைக்கிள் காரைக்குடி- திருச்சி பை பாஸ் ரோட்டில் பேயன்பட்டி விலக்கில் திரும்பும்போது எதிரே திருச்சியிலிருந்து ஏர்வாடி நோக்கி வந்த கார் மோதியது. இதில் கார்த்திகேயன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மூர்த்தி பலத்த காயங்களுடன் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து குன்றக்குடி போலீசார் கார் டிரைவர் ஹிதயதுல்லா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்