83 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 4 பேர் பலியாகினர்.

Update: 2021-08-12 15:29 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 4 பேர் பலியாகினர். 
83 பேருக்கு கொரோனா 
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று தமிழகத்தில் மேலும் 1,942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வரும் வரை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
4 பேர் பலி 
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 841-ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 62 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 83ஆக உள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 878 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 4 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை மாவட்டத்தில் 880-ஆக உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா பாதிப்பு உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
----------

மேலும் செய்திகள்