தூக்குப்போட்டு பெண் தற்கொலை

உசிலம்பட்டி அருகே மகள் காதல் திருமணம் செய்ததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-11 22:01 GMT
உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே உள்ள மெய்யணம்பட்டியை சேர்ந்தவர் முருகன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 45). இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களது மகள் காதல் திருமணம் செய்துகொண்டார். இதனால் மனவேதனையில் இருந்த ஜெயலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்