விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-11 20:00 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கவிதா(வயது 38). இவருக்கு அடிக்கடி தீராத வயிற்று வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த கவிதா சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) எடுத்து குடித்து விட்டார். இதை அறிந்த உறவினர்கள் கவிதாவை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து கவிதாவின் தாய் உண்ணாமலை கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்