பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
மானூர்:
மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜ் மனைவி அன்புச்செல்வி (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் அதே ஊரில் உள்ள சண்முகவேல் (40) என்பவருடன் நட்பு ரீதியில் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், அன்புச்செல்வி திடீரென தன்னுடன் பேச மறுத்ததால் ஆத்திரமடைந்த சண்முகவேல், மதுபோதையில் அன்புச்செல்வியின் வீட்டிற்கு வந்து, அவருடைய சாதி குறித்து அவதூறாக பேசி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தாழையூத்து துணை போலீ்ஸ் சூப்பிரண்டு அர்ச்சனா வழக்குப்பதிவு செய்து சண்முகவேலை கைது செய்தார்.