நெல்லையில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நெல்லையில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதிகளில் சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், கண்காணிப்பு கேமராக்களை மறைக்கும் வகையிலும் ஆக்கிரமிப்புகள் அதிகளவு காணப்பட்டது. இவற்றை அகற்ற மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டார்.
இதையொட்டி நேற்று முன்தினம் மாநகரில் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. நேற்று 2-வது நாளாக நெல்லை டவுன் ரதவீதிகள், சேரன்மாதேவி ரோடு, தென்காசி ரோடு, தச்சநல்லூர் -சங்கரன்கோவில் ரோடு, மேலப்பாளையம் -அம்பை ரோடு, கே.டி.சி. நகர், வி.எம்.சத்திரம் பகுதிகளில் மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
பெயர் பலகைகள், கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்பு கூரைகள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டன. இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.