அகதிகள் முகாமில் அதிகாரிகள் ஆய்வு

இலங்கை அகதிகள் முகாமில் அதிகாரிகள் ஆய்வு

Update: 2021-08-11 18:13 GMT
காங்கேயம், 
திருப்பூர் மாவட்டம், காங்கேயம், கரூர் சாலையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் நேற்று காலை அகதிகள் மறுவாழ்வு துறை உதவி ஆணையாளர் பாஸ்கர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது அகதிகள் முகாமில் வசித்து வருபவர்களிடம் அவர்களின் குறைகள் மற்றும்பிரச்சினைகள் கேட்டறியப்பட்டது. 
அப்போது காங்கேயம் தாசில்தார் சிவகாமி, மண்டல துணை தாசில்தார் மயில்சாமி, வீரணம்பாளையம் ஊராட்சி தலைவர் பேபி, வருவாய் ஆய்வாளர்கள் கனகராஜ், நடராஜ், வீரணம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்