விரைவுசாலை திட்டத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்
அதிவேக விரைவு சாலை திட்டத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கருத்து கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தினர்.
காவேரிப்பாக்கம்
அதிவேக விரைவு சாலை திட்டத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கருத்து கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தினர்.
கருத்து கேட்பு கூட்டம்
அதிவேக விரைவு சாலை திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்காக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாசு கட்டுபாடு வாரியம் சார்பில் நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தில் நடைபெற்றது.
தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு அதிவிரைவு சாலை திட்டம் தொடங்கப்பட்டு, இந்த திட்டத்திற்காக கடந்த 2018-ம் ஆண்டு முதல் தேசிய நெடுஞ்சாலை துறையினர் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த திட்டம் தரையில் இருந்து 3 மீட்டர் உயரத்தில் மேம்பாலம் மூலம் சுமார் 262 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலையாகவும், சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்கள் செல்லக் கூடிய வகையில் செயல்படுத்த உள்ளது.
முன்னுரிமை
இந்தநிலையில் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் கருத்து கேட்பு கூட்டம் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் பகுதியில் நடைபெற்றது.
இந்த கருத்துகேட்பு கூட்டத்திற்கு மாவட்ட நில எடுப்பு சிறப்பு வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகளின் கேள்விகளுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளித்தனர். பெரும் பாலானவர்கள் நிலம் கொடுத்தவர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்,
கையகப்படுத்திய நிலத்திற்கு கொடுக்கப்படும் இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும், பணத்திற்கு ஜி.எஸ்.டி. பிடிக்க கூடாது என கேட்டுக் கொண்டனர்.
கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனா் மோகன், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ரவிச்சந்திரன், சோளிங்கர் தாசில்தார் வெற்றிகுமார், நெமிலி தாசில்தார் சுமதி, வருவாய் ஆய்வாளர்கள் முரளிமனோகர், பன்னீர்செல்வம் உள்பட, நிலம் கொடுத்தவர்கள் கலந்துகொண்டனர்.