திருவாரூரில், ஆடிப்பூர விழா: கமலாம்பாளுக்கு ஆயிரக்கணக்கான வளையல்களை அணிவித்து வழிபாடு

ஆடிப்பூர விழாவையொட்டி திருவாரூர் கமலாம்பாளுக்கு ஆயிரக்கணக்கான வளையல் அணிவிக்கப்பட்டு வழிபாடு நடந்தது.

Update: 2021-08-11 17:06 GMT
திருவாரூர்:-

ஆடிப்பூர விழாவையொட்டி திருவாரூர் கமலாம்பாளுக்கு ஆயிரக்கணக்கான வளையல் அணிவிக்கப்பட்டு வழிபாடு நடந்தது.

கமலாம்பாள்

திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாம்பாள் சன்னதியில் ஆடிப்புர விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது. நாள் தோறும் அம்பாள் வீதியுலா மற்றும் தேரோட்டம் கோவில் உள் பிரகாரத்தில் நடந்தது. 
இதன் தொடர்ச்சியாக ஆடிப்பூர விழாவின் நிறைவாக அம்பாளுக்கு ஆடிப்பூரம் வெள்ளை சாற்றுதல், பூரம் கழித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

ஆயிரக்கணக்கான வளையல்கள்

அப்போது கமலாம்பாளுக்கு ஆயிரக்கணக்கான வளையல்கள் அணிவிக்கப்பட்டது. மாலை அம்பாள் வளையல் அலங்காரத்துடன் வீதியுலா கோவில் உள் பிரகாகத்தில் நடந்தது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கவிதா தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்