குருபரப்பள்ளி அருகே வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

குருபரப்பள்ளி அருகே வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு போனது.

Update: 2021-08-11 15:55 GMT
குருபரப்பள்ளி:
குருபரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 38). இவர் கோழி முட்டை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று வெளியே சென்று விட்டு, அவர் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவை உடைத்து அலமாரியில் இருந்த 2¾ பவுன் நகைகள், பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்