ராயக்கோட்டையில் 2 பெண் குழந்தைகளின் தந்தை தற்கொலை
ராயக்கோட்டையில் 2 பெண் குழந்தைகளின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை ரஹ்மத்காலனியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 36). இவருடைய மனைவி சிலோர்மணி (30). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அருண்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறு காரணமாக சிலோர்மணி கணவரிடம் கோபித்து கொண்டு, கிருஷ்ணகிரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். இதனால் மனமுடைந்த அருண்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.