சாத்தான்குளம் அருகே விவசாயி வீட்டில் 11 பவுன் நகை திருட்டு

சாத்தான்குளம் அருகே விவசாயி வீட்டில் 11 பவுன் நகை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்

Update: 2021-08-11 15:28 GMT
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே கருவேலம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி (வயது 70). விவசாயியான இவரது 2-வது மகளுக்கு வரும் 23-ஆம்தேதி திருமணம் நடக்க உள்ளது. சம்பவத்தன்று திருமண அழைப்பிதழ் கொடுக்க கருணாநிதி திருமண வெளியூர் சென்று விட்டாராம். அவரது மனைவி தோட்டத்துக்கு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தள்ளனர். வீட்டிற்குள் இருந்த பிரோவையும் உடைத்து அதில் இருந்த 11 பவுன் தங்க நகையை திருடிக் கொண்டு தப்பி சென்று விட்டனராம்.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்