நள்ளிரவில் வீடு புகுந்து 9½ பவுன் நகை திருட்டு

கல்லக்குடி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து 9½ பவுன் நகைகள் திருட்டுபோனது

Update: 2021-08-11 01:30 GMT
கல்லக்குடி, 
கல்லக்குடி அருகே வடுகர்பேட்டை வி.பி.காலனியை சேர்ந்தவர் ரோசம்மாள்(வயது 45). இவர் திருச்சியில் உள்ள கான்வென்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 மாதத்துக்கு முன் அவருடைய தாயார் இறந்துவிட்டதால், ரோசம்மாள் தனது 13 வயது மகளுடன் வி.பி.காலனியில் தங்கி உள்ளார்.

 இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ரோசம்மாளின் மகள் வீட்டுக்குள் படுத்து தூங்க, ரோசம்மாள் வீட்டிற்கு வெளியே உள்ள ஆட்டு பட்டியில் படுத்து தூங்கி உள்ளார். நள்ளிரவில் சப்தம் கேட்கவே எழுந்து பார்த்த போது, 2 பேர் வீட்டிற்குள் இருந்து அருகில் உள்ள காட்டுப்பகுதி நோக்கி ஓடியுள்ளனர்.

 இதனால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 9½ பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்