மாநகராட்சி பணியாளர்களுக்கு யோகா பயிற்சி- ஆணையாளர் கிறிஸ்துராஜ் மனைவியுடன் பங்கேற்பு

சேலம் மாநகராட்சி பணியாளர்களுக்கு நடைபெற்ற யோகா பயிற்சி முகாமில் ஆணையாளர் கிறிஸ்துராஜ் மனைவியுடன் கலந்து கொண்டார்.

Update: 2021-08-10 22:06 GMT
சேலம்:
சேலம் மாநகராட்சி பணியாளர்களுக்கு நடைபெற்ற யோகா பயிற்சி முகாமில் ஆணையாளர் கிறிஸ்துராஜ் மனைவியுடன் கலந்து கொண்டார்.
யோகா புத்துணர்வு பயிற்சி முகாம்
சேலம் மாநகராட்சி, யோகா இயற்கை மருத்துவத்துறை மற்றும் அரசு ஆஸ்பத்திரி இணைந்து மாநகராட்சி பணியாளர்களுக்கு யோகா புத்துணர்வு பயிற்சி முகாம் தொடக்க விழா மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஆணையாளர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆணையாளர் கிறிஸ்துராஜ், மனைவி உஷாதேவியுடன் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
இந்த பயிற்சி குறித்து ஆணையாளர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:-
உடல் மற்றும் மனம் புத்துணர்வு பெற யோகா பயிற்சி எளிய முறையாகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவசியம் தேவை என்பதை கருத்தில் கொண்டு மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் சுழற்சி முறையில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
சுவாச பயிற்சி
இந்த பயிற்சியில் 28 பணியாளர்கள் கலந்து கொண்டனர். 4 நாட்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும். இதே போன்று வாரம் தோறும் 28 பணியாளர்கள் வீதம் 84 பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று சுவாச பயிற்சி, பிரணயாமம், ஆசனங்கள் மற்றும் தியானம் ஆகிய யோகா பயிற்சிகள் நடைபெற்றது. இதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை மருத்துவ அலுவலர் டாக்டர் சுதாகர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.

மேலும் செய்திகள்