தாய் மகன் உள்பட 3 பேர் கைது

தொடர் திருட்டில் ஈடுபட்ட தாய் மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-10 20:27 GMT
புதூர்,ஆக.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் போலீஸ் தனிப்படையை அமைத்தார். காளிகாப்பான் பிரிவில் தனிப்படை போலீசார் 2 குழுக்களாக பிரிந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் போலீசாரைக் கண்டதும் அங்கிருந்து நைசாக ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ஒத்தக்கடையைச் சேர்ந்த ராஜா (வயது 25) மற்றும் அவரது தாயார் சாந்தா (47) என்பது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் இவர்கள் இருவரும் கண்ணன் என்பவருடன் சேர்ந்து ஒத்தக்கடை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 
இதைத் தொடர்ந்து போலீசார் தாய்-மகன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 23 பவுன் நகைகளை மீட்டனர்.

மேலும் செய்திகள்