அம்பாச்சி அம்மன் கோவில் பால்குட திருவிழா
அம்பாச்சி அம்மன் கோவில் பால்குட திருவிழா நடைபெற்றது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சென்னிவனம் கிராமத்தில் உள்ள அம்பாச்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தையொட்டி பால்குட திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஆடிப்பூரத்தையொட்டி நேற்று பால்குட திருவிழா நடைபெற்றது. இதில் அம்மனுக்கு மாலை அணிந்திருந்த பக்தர்கள், நேற்று மாலை சென்னிவனம் கிராமத்தில் உள்ள ஆயற்குளம் ஏரியில் இருந்து காப்புக்கட்டி பால்குடத்துடன் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தனர். அங்கு அம்பாச்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி அம்மனை வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் சென்னிவனம், மேட்டுப்பாளையம், சின்ன சென்னிவனம் மற்றும் ராயம்புரம் ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.