கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

ஆலங்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.

Update: 2021-08-10 20:03 GMT
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் சுவாமிதாஸ் (வயது 50). இவர் அந்த பகுதி தோட்டங்களில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். 
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒருவரது தோட்டத்திற்கு சென்றுள்ளார். மதுபோதையில் இருந்த அவர் தோட்டத்தில் கிணற்றின் அருகே உட்கார்ந்தபோது நிலைதடுமாறி கிணற்றின் உள்ளே விழுந்து விட்டார். இதில் படுகாயமடைந்த சுவாமிதாஸ் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுவாமிதாஸ் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்