கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

சிவகாசி அருகே கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-10 18:45 GMT
சிவகாசி, 
சிவகாசி அருகே உள்ள மாரனேரி ஏ.துலுக்கப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து என்கிற டேவிட் (வயது 38). இவரும் அதே பகுதியை சேர்ந்த உமர்பாரூக் (39) என்பவரும் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து, உமர்பாரூக்கை வேலிகம்பால் தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த உமர்பாரூக் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து உமர்பாரூக் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்