ஆம்பூர் அருகே ஆட்டை கொன்ற மலைப்பாம்பு பிடிபட்டது
ஆட்டை கொன்ற மலைப்பாம்பு பிடிபட்டது
ஆம்பூர்
ஆம்பூரை அடுத்த கதவாளம் பகுதியில் நேற்று சிலர் ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டிருந்தனர். அப்போது 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று திடீரென ஒரு ஆட்டின் உடலை சுற்றியது இதனால் மூச்சுத்திணறி ஆடு இறந்து விட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று பாம்பை பிடித்து ஆட்டை மீட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினரிடம் மலைப்பாம்பை பொதுமக்கள் ஒப்படைத்தனர். வனத்துறையினர் பாம்பை மீட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர். மலைப்பாம்பு ஒன்று ஆட்டை கொன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.