ஸ்ரீவைகுண்டம் அருகே தனியார் கல்குவாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

ஸ்ரீவைகுண்டம் அருகே தனியார் கல்குவாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்

Update: 2021-08-10 15:06 GMT
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் பேட்மாநகரம் உள்ள மூலக்கரை கிராமத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தனியார் கல் குவாரி உரிமத்தை ரத்து செய்யக் கோரி அப்பகுதி மக்கள் குவாரியை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் ஆகியோர்  போராட்டக் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பொதுமக்களின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார்  உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டக்குழுவினர் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் ஸ்ரீ மூலக்கரை மேலூர் ஊர் தலைவர் இசக்கிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கங்கநாட்டார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்