செய்யாறில் சமூக இடைவெளியை பின்பற்றாத நகை கடைக்கு ‘சீல்’
செய்யாறில் சமூக இடைவெளியை பின்பற்றாத நகை கடைக்கு வருவாய்த்துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மண்டல துணை தாசில்தார் ஸ்ரீதேவி, வருவாய் ஆய்வாளர் கலைவாணி, கிராம நிர்வாக அலுவலர் கோபி, மோகன்ராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் காந்தி சாலையில் கொரோணா தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நகைக்கடை ஒன்றில் சமூக இடைவெளி இன்றியும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாத வகையில் நகைக்கடை உரிமையாளர் விற்பனை மேற்கொண்டதாக தெரிகிறது.
இதைபார்த்த அதிகாரிகள், கடை உரிமையாளரை எச்சரித்து, ரூ.200 அபராதம் விதித்து, கடைக்கு சீல் வைத்தனர்.