போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து சப்-இன்ஸ்பெக்டர் சாவு

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திடீரென மயங்கி விழுந்த சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-08-10 09:22 GMT
சென்னை,  

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உளவுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியில் இருந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 59). இவர் நேற்று இரவு கமிஷனர் அலுவலக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை உடனடியாக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அவர் இறந்து போனார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்