சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி கைது

சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்

Update: 2021-08-09 20:42 GMT
திருச்சி
 எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 23). இவர் தனது உறவுக்கார பெண்ணான கரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது அந்த சிறுமி 6 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பினருக்கு புகார்கள் வந்தது. அதன்அடிப்படையில் சைல்டுலைன் அமைப்பினர் எடமலைப்பட்டிபுதூர் சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் இதுகுறித்து கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்