திருப்பத்தூர் அருகே ஆ.தெக்கூர் செட்டி ஊரணிக்கரையை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 36). இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் நேற்று தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த வெள்ளையம்மாள் வயலுக்கு சென்று குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் நெற்குப்பை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.