நெல்லை:
மெய்ஞானி குணாநிதி மகரிஷியால் எழுதப்பட்ட "ஆசைப்படாதே எதுவும் கிடைக்காது, தேடு எல்லாம் கிடைக்கும்" என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நெல்லை சந்திப்பில் நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அதனை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட இயக்குனர் எம்.எஸ்.சுரேஷ், டாக்டர் மாணிக்கவாசகம், ரமேஷ் ராஜா, ஆர்.ஆர்.திருப்பொன்ராஜ், பாலசுப்பிரமணியன் என்ற கோடீஸ்வரன் மணி, மேகலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மீனாட்சிசுந்தரம் வரவேற்று பேசினார். வக்கீல் கே.பி.ரஞ்சனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் வெற்றி வேந்தன் நன்றி கூறினார்.