ஊட்டி,
நீலகிரி மாவட்ட பொது நூலகத்துறை சார்பில்சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் ஊட்டியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் சுதந்திரதின போராட்ட வீரர்கள் பற்றிய புத்தக கண்காட்சி நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
இதற்கு நூலக வாசகர் வட்ட மூத்த உறுப்பினர் கணேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் ஜோதிமணி புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாவட்ட மைய நூலகர் ரவி வரவேற்றார். வாசகர் வட்ட உறுப்பினர்கள், பொதுமக்கள் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளின்படி கலந்து கொண்டு கண்காட்சியை கண்டு ரசித்தனர். இதையொட்டி இணைய வழி மூலம் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளதாக பொது நூலகத்துறையினர் தெரிவித்தனர்.