டிரைவர் இன்றி 300 மீட்டர் தூரம் பின்னோக்கி சென்ற மின்சார ரெயில்

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் டிரைவர் இன்றி 300 மீ்ட்டர்தூரம் பின்னோக்கி சென்றது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-09 18:00 GMT
அரக்கோணம்

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் டிரைவர் இன்றி 300 மீ்ட்டர்தூரம் பின்னோக்கி சென்றது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

டிரைவர் இன்றி ஓடிய ரெயில்

ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 6-வது நடைமேடையில் உள்ள தண்டவாளம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாராமரிப்பின்றி ரெயில் போக்குவரத்துக்கு தடைசெய்யப்பட்ட பாதையாகும். 
இங்கு 8 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

 இந்த ரெயில் நேற்று மாலை திடீரென டிரைவர் இன்றி பின்னோக்கி தானாக நகரத்தொடங்கியது. சுமார் 300 மீட்டர் தூரம் சென்றது. 

அப்போது எதிர்பாராத விதமாக மின்சார ரெயில் என்ஜீனின் மேலே மின்கம்பியில் உரசி செல்லும் பென்ட்டோகிராப் உடைந்து சேதமடைந்தது. இதனால் மின்சார கம்பியில் சிக்கி ரெயில் நின்றது.

அதிகாரிகள் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார ரெயில் என்ஜினின் சக்கரம் நகராமல் இருக்க தண்டவாளத்தில் இரும்பு தடுப்பு கம்பி வைப்பது வழக்கம். ரெயில்வே ஊழியர்களின் மறதியால் இரும்பு தடுப்பு கம்பி வைக்காததால் ரெயில் தானாக நகர்ந்ததாக முதற்கட்ட விசாரனையில் தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும், இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர். ரெயில்தானாக நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

இந்த சம்பவத்தால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்