மீஞ்சூரில் ரூ.62 கோடியில் புதிய நீர்த்தேக்க பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள கிணறுகளில் கடல் நீர் புகுந்து உவர்ப்பு தன்மையுடன் காணப்படுவதால் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியது. இதனைத் தொடர்ந்து நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டூர் தத்தைமஞ்சி ஏரிகளை இணைத்து 6-வது புதிய நீர்த்தேக்கம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

Update: 2021-08-09 10:43 GMT
அதன்படி ஆரணி ஆற்றில் 1.76 டி.எம்.சி. மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையிலும், கடல் நீர் உள்ளே புகுவதை தடுக்கும் வகையிலும் புதிய கால்வாய்கள், தடுப்பணைகள் கட்டவும், குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நீர்த்தேக்க கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

நபார்டு மற்றும் மாநில அரசு நிதியுதவியுடன் ரூ.62.5 கோடி ஒதுக்கப்பட்டு நடைபெற்று வரும் இந்த பணிகளை மழைக்காலத்திற்கு முன்பாக முடிக்க நீர்வளத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் தத்தைமஞ்சி ஏரிக்கரைக்கு சென்று நீர்த்தேக்கம் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நீர்வளத்துறை அதிகாரிகளிடம் புதிய நீர்த்தேக்கம் கட்டுமான பணி குறித்து அவர் கேட்டறிந்தார். ஆய்வின்போது, தி.மு.க. மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் ரமேஷ்ராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்