பெரியபாளையம் பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணி (வயது 70). கணவரை இழந்தவர். இவரது மகள் விஜயா. எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே உள்ள ஏனம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருகிறார்.

Update: 2021-08-09 10:38 GMT
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜயாவின் கணவர் காலமானதாக தெரிகிறது. எனவே, தனது மகளிடம் துக்கம் விசாரிக்க மூதாட்டி கல்யாணி ஏனம்பாக்கம் கிராமத்திற்கு வந்திருந்தார். இதையடுத்து, மூதாட்டி நேற்று கனகம்மாசத்திரம் செல்வதற்காக பெரியபாளையம் பஸ் நிலையம் வந்துள்ளார். அப்போது மூதாட்டியின் கழுத்தில் இருந்த சுமார் 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் நைசாக அறுத்து சென்றதாக தெரிகிறது. இதனால், மூதாட்டி கதறி அழுது புலம்பியவாறு பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்தார்.

அருகிலிருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசபடுத்்தி நடந்ததை கேட்டறிந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்