நெல் அறுவடை எந்திரத்தில் உதிரிபாகம் திருடிய 4 பேர் கைது

கடையம் அருகே நெல் அறுவடை எந்திரத்தில் உதிரிபாகம் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-08 20:30 GMT
கடையம்:
கடையம் அருகே முதலியார்பட்டி அருகில் ஐயம்பிள்ளை குளத்திலுள்ள வயக்காட்டில் நெல் அறுவடை செய்து விட்டு இரவு நேரம் ெரயில்வே கேட் அருகே அருகே படுத்து தூங்கினர். அந்த எந்திரத்தில் உள்ள உதிரிபாகத்தை யாரோ திருடிச் சென்று விட்டதாக கடையம் போலீசில் மேல கருங்குளத்தை சேர்ந்த அருள் செல்வம் (வயது 44) என்பவர் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று மாதாபுரம் அருகே போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தென்காசி அருகே இடைகால் வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்த சுடலைமாடன் மகன் முருகன் (23), நல்லையா மகன் கதிர்வேல் (23) என்பதும், நெல் அறுவடை எந்திரத்திற்கு பயன்படுத்தக்கூடிய உதிரிபாகத்தை தனது நண்பர்கள் ஆசாத் நகர் அருகே வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். அதன்பேரில் அந்த எந்திரத்தை திருடி வைத்திருந்ததாக கடையம் பாரதி நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் கருப்பசாமி என்ற விஜய் (24), வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் புஷ்பராஜ் (23) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தார்.

மேலும் செய்திகள்