கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் பவித்ர உற்சவ விழா
கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் பவித்ர உற்சவ விழா நடந்தது.
பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் பவித்ர உற்சவ விழா 4 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் புண்ணியாகவாசனம், பகவத் பிரார்த்தனை, சிறப்பு ஹோமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக கும்ப ஜெபம் மற்றும் அனைத்து திரவியங்களால் அபிஷேகம், புஷ்ப யாகம், தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் ரவி பட்டாச்சாரியார் குழுவினர் செய்திருந்தனர்.