மத்திய போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு
மத்திய போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு
மதுரை
மத்திய தேர்வாணையம் சார்பில் மத்திய ஆயுத படை போலீஸ் பிரிவில் உதவி கமாண்ட் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. மதுரையில் இந்த தேர்வுக்காக மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகம், என்.எம்.ஆர்.சுப்புராமன் கல்லூரி, வக்பு போர்டு கல்லூரி, சவுராஸ்டிரா பள்ளி, டான் பாஸ்கோ பள்ளி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளி ஆகிய 6 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வு காலை 10 மணி முதல் 12 மணி வரையும், பகல் 2 மணி முதல் 5 மணி வரையும் நடந்தது. தேர்வுக்காக மொத்தம் 2 ஆயிரத்து 382 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். ஆனால் அதில் காலையில் நடந்த தேர்வில் 759 பேர் மட்டுமே பங்கேற்றனர். 1,623 பேர் வரவில்லை. அதன்பின் நடந்த தேர்வில் 745 பேர் மட்டுமே பங்கேற்றனர். 1,637 பேர் வரவில்லை. இந்த தேர்வு மையங்களில் கலெக்டர் அனிஷ் சேகர் நேற்று ஆய்வு செய்தார்.