பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் ஆடி அமாவாசை விழா

பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் ஆடி அமாவாசை விழா

Update: 2021-08-08 20:05 GMT
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் ஆடி அமாவாசை விழா நடைபெற்றது. விழாவையொட்டி பால்சுனை கண்ட சிவபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், புனிதநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து வாசனை கமலும் வண்ண மலர்களால் சதுரகிரி மகாலிங்கம் வடிவத்தில் பால் சுனை சிவபெருமானுக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தீப ஆராதனைகள் நடைபெற்றது. இந்த நிலையில் பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் வைக்கப்பட்ட 18 சித்தர்களின் உருவப்படத்திற்கு தீபாராதனை நடந்தது.

மேலும் செய்திகள்