அரசு பள்ளிக்கூடத்தில் கூடுதல் கட்டிடம்; சபாநாயகர் மு.அப்பாவுவிடம் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

அரசு பள்ளிக்கூடத்தில் கூடுதல் வகுப்புறை கட்டித்தர வேண்டும் என சபாநாயகர் மு.அப்பாவுவிடம் ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.

Update: 2021-08-08 19:42 GMT
பணகுடி:
பணகுடியை அடுத்த ரோஸ்மியாபுரம் அரசு உயர்நிலைப் பளளி தலைமை ஆசிரியை பியூலா ஹெலன் ராணி மற்றும் ஆசிரியைகள், சபாநாயகர் மு.அப்பாவுவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.
அந்த மனுவில், ‘ரோஸ்மியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 150-க்கும் அதிகமான மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு 3 வகுப்பறைகள் உள்ளன. மேலும் 2 வகுப்பறைகள் இல்லாததால் மாணவ- மாணவிகள் வெளியே அமர்ந்து கல்வி கற்கும் நிலை உள்ளது. எனவே பள்ளிக்கூடத்தில் கூடுதலாக 2 வகுப்பறைகள், கழிப்பிடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்ட ஏற்பாடு செய்து தரும்படி ஊர்மக்கள் சார்பில் கேட்டு கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட சபாநாயகர், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்