வீட்டை சேதப்படுத்திய திருநங்கை மீது வழக்கு

காரைக்குடியில் வீட்டை சேதப்படுத்திய திருநங்கை மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-08-08 18:51 GMT
காரைக்குடி,

காரைக்குடி சேர்வார்ஊரணி பகுதியில் பஞ்சவர்ணம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் மாயா என்ற திருநங்கை வசித்து வருகிறார்.. இவர் குறி சொல்வதை அவருக்கு பழக்கமான திருநங்கைகள் தயாஸ்ரீ, வைஷிகா ஆகியோர் அவரை கண்டித்ததாக தெரிகிறது. அப்போது மாயாவுக்கும், அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதை பார்த்த வீட்டு உரிமையாளர் மகன் பூமிநாதன், 2 திருநங்கைகளையும் அடித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த சுபா(வயது 20) என்ற திருநங்கை, மாயா தங்கி இருந்த வீட்டின் ஓடுகளை சேதப்படுத்தி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் சுபா மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்