செம்மண் கடத்திய 3 பேர் கைது

சிங்கம்புணரி அருகே செம்மண் கடத்திய 3 பேர் ைகது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-08 18:08 GMT
சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே அரளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சேதுபதி(வயது 50) என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து அரசு விதிமுறை மீறி செம்மண் தோண்டி கடத்தி செல்வதாக தாசில்தார் திருநாவுக்கரசுக்கு தகவல் கிடைத்தது. இதன் மூலம் சம்பவ இடத்தை தாசில்தார் ஆய்வு செய்த போது வீட்டின் கட்டிட பணிக்காக அவர் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் எடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரம், 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அரளிபட்டி கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில், பொக்லைன் ஓட்டிய தெக்கூரை சேர்ந்த வெங்கடேசன்(25), டிராக்டர்கள் ஓட்டிய ஒழுகமங்கலம் பகுதியை சேர்ந்த முருகன்(45), தெக்கூைர சேர்ந்த இன்னொரு முருகன்(58) ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாக நிலத்தின் உரிமையாளர் சேதுபதியை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்