விஷம் குடித்து விவசாயி தற்கொலை

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-08 17:41 GMT
வெள்ளியணை
உப்பிடமங்கலம் அருகே உள்ள வையாபுரி கவுண்டனூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 50), விவசாயி. மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் கடந்த ஒரு வாரமாக அளவுக்கதிகமாக மது அருந்தி வந்துள்ளார். இந்தநிலையில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்