ஒரே நேரத்தில் 2 கைகளால் ஓவியம் வரைந்து கல்லூரி மாணவி சாதனை
ஒரே நேரத்தில் 2 கைகளால் ஓவியம் வரைந்து கல்லூரி மாணவி சாதனை படைத்தார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் செந்தில்வேல். இவர் மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு மகள் தனுவர்ஷா (வயது 22) என்ற மகள் உள்ளார்.
இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மாணவி தனுவர்ஷா ஒரே நேரத்தில் இரு கைகளால் 30 நிமிடத்தில் பறவைகள், பட்டாம் பூச்சிகள், விலங்குகள் போன்ற 32 ஓவியங்கள் வரைந்து சாதனை படைத்துள்ளார். இதனை இந்தியா புக் ஆப் ரெக்காா்டில் உறுதிப்படுத்தி சான்றிதழ் பெற்றுள்ளார்.
பெற்றோர் உற்சாகப்படுத்தியதாலும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் பேரிலும், இந்த சாதனை படைத்துள்ளதாக மாணவி தெரிவித்துள்ளார். சாதனை படைத்த மாணவியை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வெகுவாக பாராட்டினர்.