நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழுவை அமைக்க வேண்டும்

செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழுவை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2021-08-08 17:03 GMT
கொரடாச்சேரி:
செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழுவை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
பொதுக்குழு கூட்டம் 
கொரடாச்சேரியில்  காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் கமிட்டிகள்,  துணை அமைப்புகளுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரைவேலன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை மகேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் நாகூர் நவ்ஷாத் ஆகியோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து வட்டார, நகர, பேரூர் மற்றும் துணை அமைப்பு நிர்வாகிகளிடம் மாநில பார்வையாளர்கள் தனித்தனியே ஆய்வு நடத்தினர்.
குழு அமைக்க வேண்டும்
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ்  விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற எம்.பி.க்களை கொண்ட குழுவை அமைக்க வேண்டும். 3  வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வேண்டும். புதிய மின்சார சட்டத்தை திரும்ப  பெற வேண்டும்.
மாணவர்களுக்கு கல்விக்கடன் 
தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும். திருவாரூர்- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேகதாதுவில்  அணை கட்டும் முயற்சியை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் கல்விக்கடன் வழங்க வேண்டும். நடைபெற உள்ள  உள்ளாட்சி  தேர்தலில் கூடுதல் இடங்களை பெற்று வெற்றி பெறுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில்  மாவட்ட பொதுச்செயலாளர் வீரமணி, நகர செயலாளர்கள்  எழிலரசன்,  சாம்பசிவம்,  கொரடாச்சேரி  பேரூராட்சி தலைவர்  நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்