பாலக்கோட்டில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து சாவு

பாலக்கோட்டில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

Update: 2021-08-08 16:59 GMT
பாலக்கோடு:
பாலக்கோட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் செங்கதிர் (வயது 57). இவர் தர்மபுரி போலீஸ் குடியிருப்பு காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று காலை இவர் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். வழியில் பாலக்கோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பி கொண்டு புறப்பட்டார். 
பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து சிறிது தூரம் சென்றவுடன் செங்கதிர் திடீரென மயங்கி சாலையில் கீழே விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள், அவரை பரிசோதித்த போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. 
விசாரணை
இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தினார். இறந்து போன சப்-இன்ஸ்பெக்டர் செங்கதிருக்கு சுஜாதா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்