போடி அருகே அம்மாபட்டியில் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆய்வு
போடி அருகே உள்ள அம்மாபட்டியில் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
போடி :
போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டி கிராமத்தில் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிராம மக்கள் அவரை சந்தித்து தங்கள் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும், மந்தையன் குளத்தை தூர்வார வேண்டும், குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்துபேசி குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார். பின்னர் அவர் மந்தையன் குளத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு இடங்களை பார்வையிட்டார். இதில் அம்மாபட்டி ஊராட்சி தலைவர் சின்னபாண்டி, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரித்தா, ஒன்றிய செயலாளர் சற்குணம், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி மற்றும் த.மா.கா. மாவட்ட தலைவர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.