தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் 2-வது தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 20). இவர் லூர்தம்மாள்புரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மரிய இருதயம், கஞ்சா விற்பனை செய்ததாக மாரியப்பனை கைது செய்தார். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்.