தூத்துக்குடியில் ஆட்டோ மோதி வாலிபர் சாவு

தூத்துக்குடியில் லோடு ஆட்டோ மோதி வாலிபர் இறந்துபோனார்.

Update: 2021-08-08 13:24 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி சிலுவைப்பட்டி கணபதி நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மகன் முத்துக்குமார் (வயது 20). இவர் மோட்டார் சைக்கிளில் சோட்டையன்தோப்பு சந்திப்பில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு திரவியபுரம் 6-வது தெருவை சேர்ந்த ராஜாமுகமது (39) என்பவர் லோடு ஆட்டோவில் வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக லோடு ஆட்டோ, முத்துக்குமார் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முத்துக்குமார் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்