கொேரானா பரவல் காரணமாக இந்த ஆண்டும் மைசூரு தசரா விழா எளிமையாக கொண்டாடப்படும்

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் மைசூரு தசரா விழா எளிமையாக கொண்டாடப்படும் என்று மந்திரி எஸ்.டி.சோமசேகர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-07 21:40 GMT
மைசூரு: கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் மைசூரு தசரா விழா எளிமையாக கொண்டாடப்படும் என்று மந்திரி எஸ்.டி.சோமசேகர் தெரிவித்துள்ளார். 

மைசூரு தசரா விழா

மைசூரு-சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் நேற்று மைசூருவுக்கு வந்தார். மைசூரு சுத்தூர் மடத்தில் வைத்து எஸ்.டி.சோமசேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு (2020) மைசூரு தசரா விழா எளிமையாக கொண்டாடப்பட்டது. தற்போதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மைசூரு தசரா விழா எளிமையாக கொண்டாடப்படும். கலாசாரம், பாரம்பரியத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தசரா விழா கொண்டாடப்படும். தசரா விழா நடத்துவது தொடர்பாக பின்வரும் நாட்களில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். மேலும் முதல்-மந்திரி, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் மக்களின் ஆலோசனையையும் கேட்டு முடிவு எடுக்கப்படும். இந்த ஆண்டு தசரா விழா எளிமையாக கொண்டாடப்படுவது உறுதி. 

வருத்தம் அளிக்கிறது

மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரியாக வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மைசூருவை சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தது. மைசூருவை சேர்ந்த ராமதாஸ் எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தேன். ஆனால் அவருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை.  மைசூருவை சேர்ந்த யாருக்கும் மந்திரி பதவி கிடைக்காததது வருத்தம் அளிக்கிறது. 
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்