சக்கரம் கழன்றதில் மரத்தில் ஸ்கூட்டர் மோதி மாற்றுத்திறனாளி அதிகாரி பலி

சக்கரம் கழன்றதில் மரத்தில் ஸ்கூட்டர் மோதி மாற்றுத்திறனாளி அதிகாரி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-08-07 20:44 GMT
கீழப்பழுவூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஓலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன்(வயது 58). இவர் போலியோவால் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் செயல்படாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர் பால் வளத்துறையில் 15 ஆண்டுகளாக முதுநிலை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேலை நிமித்தமாக அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பெரம்பலூரில் இருந்து அவரது மூன்று சக்கர ஸ்கூட்டரில் வந்தார். அங்கு வேலை முடிந்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சமத்துவபுரம் அருகே சென்றபோது ஸ்கூட்டரின் ஒரு சக்கரம் கழன்று விழுந்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள புளியமரம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்