தனியார் மருத்துவமனையில் 5 பவுன் சங்கிலி, பணம் திருட்டு
தனியார் மருத்துவமனையில் 5 பவுன் சங்கிலி, பணம் திருட்டு
கரூர்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள லட்சுமிபுரம் தெற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கவுதம்(வயது 28). இவர், தனது கர்ப்பிணி மனைவியை பிரசவத்திற்காக கரூரில் உள்ள வி.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். நேற்று முன்தினம் மருத்துவமனையில் கவுதம் இல்லாத நேரத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் சங்கிலி மற்றும் ரூ.36 ஆயிரம் ஆகியவற்றை நைசாக எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து, கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கவுதம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனிகுமார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.