குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது
தூத்துக்குடியில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே தாளமுத்துநகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 8-ந்தேதி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தாளமுத்துநகர் மொட்டைகோபுரம் அருகே கஞ்சா வைத்திருந்தததாக தூத்துக்குடி வடக்கு சங்கரப்பேரியை சேர்ந்த ஜெயராமன் (வயது 32), டூவிபுரத்தை சேர்ந்த காளியப்பன் (34), தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த கனகசபாபதி (25) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து தாளமுத்துநகர் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். அதன்பேரில் ஜெயராமன், காளியப்பன், கனகசபாபதி ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து தாளமுத்துநகர் போலீசார் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.